மணிலா: பிலிப்பீன்சில் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படவுள்ளன. அந்நாட்டில் பெரும்பாலான உள்ளரங்குகளில் முகக்கவசம் அணியத் தேவை இருக்காது.
அந்தக் கட்டுப்பாட்டைக் கட்டாயப்படுத்தும் சட்டத்தை பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் ரத்து செய்யவுள்ளார். அதோடு, பிலிப்பீன்சில் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும்.
பிலிப்பீன்சின் கொள்ளைநோய்ப் பரவல் அமைச்சுகள்நிலை செயற்குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப திரு மார்க்கோஸ் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறார்.

