வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தீபாவளித் திருநாளை கொண்டாடியுள்ளார்.
"இருளை ஒழித்து உலகிற்கு வெளிச்சத்தைக் கொண்டுவரும் ஆற்றல் நம் அனைவருக்கும் உள்ளது என்பதை தீபாவளி நினைவூட்டுகிறது.
"இந்த இன்பமான நிகழ்வை வெள்ளை மாளிகையில் இன்று கொண்டாடுவதில் எமக்கு மகிழ்ச்சி," என்று திரு பைடன் தமது அதிகாரத்துவ டுவிட்டர் பக்கத்தில் நேற்று கூறினார்.

