ரயில் பெட்டியில் ஆடை சிக்கி ஆடவர் மரணம்

ரயில் பெட்டியில் ஆடை சிக்கி ஆடவர் மரணம்

1 mins read
e48958e3-a716-4c07-b690-6c47c7cd5b52
-

நியூ­யார்க்: அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரில் ரயில் பெட்­டி­யில் தனது ஆடை சிக்கித் தண்­ட­வாளத்­தில் இழுத்துச் செல்­லப்­பட்ட ஓர் இளம் ஆட­வர் உயி­ரி­ழந்­த­தா­கக் காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

நியூ­யார்க் நக­ரின் உள்­ளூர் 'சப்வே' ரயில் சேவைப் பாதை­யில் இச்சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­தது. மாண்ட ஆட­வ­ருக்கு வயது 20.

இச்­சம்­ப­வத்­திற்கு மூன்று நாள்­க­ளுக்கு முன்பு நியூ­யார்க்­கில் 'சப்வே' ரயி­லுக்கு முன்­னால் தள்ளி­வி­டப்­பட்ட 32 வயது ஆட­வர் ஒரு­வ­ருக்கு எலும்பு முறிவு ஏற்­பட்­டது. 41 வயது சந்­தேக நபர் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்­டார்.

சென்ற வார­மும் இத்­த­கைய ஒரு சம்­ப­வத்­தில் தள்­ளி­வி­டப்­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் ஓர் ஆட­வர் காய­முற்­றார்.

அண்­மைக் கால­மாக நியூ­யார்க் 'சப்வே' ரயில் பாதை­யில் வன்­முறைச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன.