60 ஆண்டுகள் குளிக்காத மனிதர் குளித்த பின்னர் மாண்டார்

60 ஆண்டுகள் குளிக்காத மனிதர் குளித்த பின்னர் மாண்டார்

1 mins read
f19a76c6-900d-4f80-9077-c55eaf693e4b
60 ஆண்டுகளுக்கு மேலாக குளிக்காத ஹஜ்ஜி (படம்: ஈரானிய ஊடகம்) -

கடந்த 60 ஆண்டுகள் குளிக்காமல் உலகின் ஆக அழுக்கான மனிதர் என்ற பெயர்பெற்ற ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 94.

ஈரானைச் சேர்ந்த அவர் ஹஜ்ஜி மாமா என்று செல்லமாக அழைக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் மாண்டதாக ஈரானிய ஊடகம் தெரிவித்தது.

ஹஜ்ஜி கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீரோ அல்லது சவுக்காரம் பயன்படுத்தி குளிக்கவில்லை என்று கூறப்பட்டது. குளித்தால் நோய் வந்துவிடும் என்று கருதி அரை நூற்றாண்டுக்கு மேலாக ஹஜ்ஜி குளிக்காமல் இருந்துள்ளார்.

அண்மையில் அவரை வலுக்கட்டயாமாக ஊர்வாசிகள் குளிக்க வைத்தபோது, அவர் நோய்வாய்ப்பட்டார். அதனைத் தொடர்ந்த அவர் காலமானார்.