வட பிலிப்பீன்சை உலுக்கிய 400க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள்

மணிலா: வட பிலிப்­பீன்சை 436 நில அதிர்­வு­கள் நேற்று உலுக்­கின. அதற்கு முந்­திய நாள், ரிக்­டர் அள­வில் 6.4 என பதி­வான நில­ந­டுக்­கம் அப்­ப­கு­தியை உலுக்­கி­ய­தில் குறைந்­தது 10 பேர் காய­முற்­ற­னர்.

நேற்று முன்­தி­னம் இரவு 10.59 மணிக்கு ஏற்­பட்ட நில­ந­டுக்­கம், பழ­மை­வாய்ந்த தேவா­ல­யங்­க­ளைச் சேதப்­ப­டுத்­தி­யது.

லாவாக் சிட்­டி­யில் உள்ள அனைத்­து­லக விமான நிலை­யத்­தின் ஓடு­பா­தை­யில் வெடிப்பு ஏற்­பட்­ட­தால் விமான நிலை­யம் மூடப்­பட்­டது. இன்­றி­ரவு அது மீண்­டும் திறக்­கப்­படும்.

அப்ரா மாநி­லத்­தில் உள்ள தினெக் சிறு­ந­க­ரில் நில­ந­டுக்­கம் 11 கி.மீ. ஆழத்­தில் மையம் கொண்­டி­ருந்­தது. தெற்கே 330 கி.மீ. தூரத்­தில் உள்ள மணிலா மாந­கர் வரை அதிர்­வு­கள் உண­ரப்­பட்­டன.

நில­ந­டுக்­கத்­தால் ககா­யன் மாநிலத்­தின் சில பகு­தி­களில் மின்­தடையும் நிலச்­ச­ரி­வு­களும் ஏற்­பட்­டன. இத­னால் அப்ரா, இலோ­கோஸ் நோர்ட்டே பகு­தி­களில் உள்ள நெடுஞ்­சா­லை­களில் போக்­கு­வ­ரத்து தடை­பட்­டது.

லகா­யன் சிறு­ந­க­ரில் உள்ள வீதி­களில் விரிக்­கப்­பட்ட பாய்­களில் சிறார்­கள் படுத்து உறங்­கியதைக் காட்­டும் புகைப்­ப­டங்­கள் இணை­யத்­தில் வலம் வந்­தன.

இலோ­கோஸ் நோர்ட்­டே­யின் ஆகப்­பெ­ரிய மருத்­து­வ­ம­னை­யின் மேற்­கூரை பெயர்ந்து விழுந்­த­தைத் தொடர்ந்து, நோயா­ளி­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­து­டன் வெளி­நோ­யாளி­கள் மருத்­துவ ஆலோ­சனை பெறு­வது தற்­கா­லி­க­மாக ரத்து செய்­யப்­பட்­டது.

உய­ர­மான கட்­ட­டங்­க­ளைத் தவிர்த்­துக்­கொள்­ளும்­படி பிலிப்­பீன்ஸ் அதி­பர் ஃபெர்டி­னாண்ட் மார்­கோஸ் ஜூனி­யர் பொது­மக்களுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!