உலகளவில் கொவிட்-19 நோய்த்தொற்று மெதுமெதுவாக அதிகரிக்கும் எனக் கணிப்பு

உலகளவில் கொவிட்-19 நோய்த்தொற்று மெதுமெதுவாக அதிகரிக்கும் எனக் கணிப்பு

2 mins read
d0057d4a-f844-4932-9a8f-a60a1a23cf55
-

வாஷிங்­டன்: உல­க­ள­வில் அன்­றாட கொவிட்-19 தொற்று எண்­ணிக்கை தற்­போ­துள்ள 16.7 மில்­லி­ய­னில் இருந்து அடுத்த ஆண்டு பிப்­ர­வரிக்­குள் சுமார் 18.7 மில்­லி­ய­னாக மெது­வாக அதி­க­ரிக்­கும் என முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

ஐரோப்­பா­வி­லும் வட அமெ­ரிக்­கா­வி­லும் குளிர்­கா­லம் நெருங்­கு­வதை முன்­னிட்டு வாஷிங்­டன் பல்­க­லைக்­க­ழ­கம் நடத்­திய பகுப்­பாய்­வில் இந்த முன்­னு­ரைப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த குளிர்­கா­லத்­தின்­போது ஜன­வ­ரி­யில் உச்­சம் தொட்ட சுமார் 80 மில்­லி­யன் எண்­ணிக்­கை­யை­விட இம்­முறை தொற்று குறை­வாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்­தா­லும் மரண எண்­ணிக்கை கிடு­கி­டு­வென அதி­க­ரிக்­காது என முன்­னு­ரைக்­கப்­ப­டு­கிறது.

தற்­போது உல­க­ள­வில் ஏறக்­கு­றைய 1,660ஆக இருக்­கும் மரண எண்­ணிக்கை, அடுத்த ஆண்டு பிப்­ர­வரி 1ஆம் தேதி 2,748ஆக கூடும் எனக் கணிக்­கப்­ப­டு­கிறது. கடந்த ஜன­வ­ரி­யில் உல­கம் முழு­வ­தும் அன்­றா­டம் 11 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான மர­ணங்­கள் பதி­வாகின.

அமெ­ரிக்­கா­வில் அன்­றா­டத் தொற்று மூன்­றில் ஒரு பங்கு கூடி ஒரு மில்­லி­ய­னைத் தாண்­டும் என அறிக்கை முன்­னு­ரைத்­துள்­ளது.

ஜெர்­ம­னி­யில் அண்­மை­யில் அதி­க­ரித்து வந்த தொற்று உச்சத்தை எட்­டி­விட்­ட­தாக அது கூறி­யது. அங்கு தொற்று மூன்றில் ஒரு பங்­கிற்­கு­மேல் குறைந்து, வரும் பிப்­ர­வ­ரிக்­குள் சுமார் 190,000ஆக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஜெர்­ம­னி­யில் கொவிட்-19 அதி­க­ரிக்க ஓமிக்­ரான் துணைத் திரி­பு­கள் பிகியூ.1 அல்­லது பிகியூ.1.1 கார­ண­மாக இருக்­க­லாம் எனக் குறிப்­பிட்ட அறிக்கை, வரும் வாரங்­களில் இவை ஐரோப்­பா­வின் மற்ற பகு­தி­க­ளுக்­குப் பர­வக்­கூ­டும் என்­றது.

2020ல் கொவிட்-19 தலை­தூக்­கி­ய­தற்­குப் பிறகு, ஜெர்­ம­னி­யில் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்ணிக்கை அண்­மை­யில் வேகமாக அதி­க­ரித்து இருப்­பது கவலை­ய­ளிப்­ப­தாக உள்­ளது என்று அறிக்கை கூறி­யது.

இதற்­கி­டையே, ஓமிக்­ரான் துணைத் திரி­பான 'எக்ஸ்­பிபி', எளி­தில் பர­வக்­கூ­டி­ய­தாக இருந்­தா­லும் அது கடு­மை­யான நோய் பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக தெரி­ய­வில்லை என்று அறிக்கை குறிப்­பிட்­டது.

ஓமிக்ரானின் பிஏ.5 துணைத் திரிபால் மக்கள் ஏற்கெனவே தொற்றுக்கு ஆளான நிலையில், உலகளவில் 'எக்ஸ்பிபி'யின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.