ஜகார்த்தா: மியன்மாரில் அமைதி யை மீண்டும் நிலைநாட்டுவது தொடர்பாக தென்கிழக்காசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் கலந்துரையாடினர். அண்மைய வாரங்களில் மியன்மாரில் வன்முறை மோச
மடைந்துள்ளது. இதில் பலர்
மாண்டுவிட்டனர்.
புதிதாக நடத்தப்படும் கலந்துரையாடல்களில் மியன்மார்
பிரதிநிதிகள் கலந்துகொள்ளமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து ஆசியான் நடத்தும் உயர்நிலை கூட்டங்களில் கலந்துகொள்ள மியன்மார் ராணுவத் தலைவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மியன்மார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, திருவாட்டி ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கவிழ்த்ததை அடுத்து, அங்கு வன்முறை வெடித்துள்ளது. ராணுவத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை இரும்புக்
கரம் கொண்டு ராணுவம் கலைத்து, அடக்கி வருகிறது.
இந்நிலையில், அண்மைக் காலத்தில் வன்முறைச் சம்பவங்கள் மோசமடைந்துள்ளன. மியன்மாரில் உள்ள ஆகப் பெரிய சிறைச்சாலை வெடிவைத்துத் தாக்கப்பட்டதும் கான்சின் மாநிலத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலும் அவற்றில் அடங்கும். இதில் குறைந்தது 50 பேர் மாண்டதாக மியன்மார் ஊடகம் தெரிவித்தது. அடுத்த மாதம் ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக மியன்மாரில் எவ்வாறு அமைதி யைத் திரும்பக் கொண்டுவருவது என்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்க தற்போதைய கலந்துரையாடல்கள் இலக்காகக் கொண்டிருப்பதாக ஆசியானுக்குத் தற்போது தலைமை வகிக்கும் கம்போடியா கூறியது. இந்தோனீசியாவில் நடைபெறும் கலந்துரையாடலுக்கு அரசியல் சார்பற்ற பிரதிநிதியை அனுப்பிவைக்கும்படி மியன்மாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அழைப்பை அந்நாட்டு ராணுவம் ஏற்க மறுத்துவிட்டதாக இந்தோனீசிய அரசாங்கம் தெரிவித்தது. வன்முறை யை உடனடியாக நிறுத்த வேண்டும், அமைதியைக் குறிக்கோளாகக் கொண்டு கலந்துரையாடல்களை நடத்த வேண்டும், சமரசப் பேச்சுவார்த்தைக்கு ஆசியான் பிரதிநிதி ஒருவரை அனுமதிப்பது, மியன்மார் மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்க ஆசியானுக்கு அனுமதி வழங்குவது ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மியன்மார் ராணுவம் ஒத்துழைக்கவில்லை என்று ஆசியான் குறைகூறியது.
இதுகுறித்து மியன்மார் ராணுவம் கருத்து தெரிவிக்கவில்லை. நாட்டின் நிலையற்றத்தன்மை, கொவிட்-19 நெருக்கடிநிலை ஆகியவை காரணமாக ஆசியான் முன்வைத்த பரிந்துரைகளை நடை
முறைப்படுத்த முடியவில்லை என்று அது முன்பு தெரிவித்
திருந்தது.

