லண்டன்: பிரிட்டனின் புதிய பிரதமர் ரிஷி சுனக் பிரிட்டிஷ் பிரதமர்கள் வழக்கமாகத் தங்கும் பெரிய இல்லத்தில் தங்காமல் சிறிய வீட்டில் குடும்பத்துடன் குடியேறவுள்ளார்.
பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரமதமரானது இதுவே முதல் முனற.
ரஷி சுனக்கின் மனைவி அக்ஷயா மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் நாராயணமூர்த்தியின் மகள். ரிஷி சுனக்-அக்ஷதா மூர்த்தி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
பிரிட்டனில் போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்த போது ரிஷி சுனக் நிதி அமைச்சராக இருந்தார். அந்த சமயம் அவர் லண்டன் டவுணிங் வீதியில் உள்ள 10-ம் எண் இல்லத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் அவர் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து மேற்கு லண்டனில் இருக்கும் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். மகள்கள் படிக்கும் பள்ளி இதன் அருகில் இருப்பதால் அவர் இந்த வீட்டில் குடியேறினார்.
தற்போது அவர் பிரதமராக ஆனதையடுத்து மீண்டும் டவுணிங் வீதியில் உள்ள 10-ம் எண் கொண்ட சிறிய இல்லத்துக்கு குடும்பத்துடன் திரும்ப முடிவு செய்துள்ளார்.
பிரிட்டனைப் பொறுத்த வரை 1735-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்தவர்கள் 10-ம் எண் கட்டடத்தின் அருகில் உள்ள 11-ம் நம்பர் கொண்ட இல்லத்தில் தான் வசித்து வந்தனர்.
4 படுக்கை அறை வசதிகளுடன் மிகப் பெரியதாக இருக்கும் இந்த கட்டடத்தை அவர்கள் பிரதமர் அலுவலகமாகவும், அதிகாரபூர்வ இல்லமாகவும் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் தற்போது இந்த இல்லத்தில் தங்காமல் பிரதமர் ரிஷி சுனக் தான் ஏற்கனவே வசித்த 10-ம் எண் இல்லத்தில் குடியேற உள்ளார். இந்த வீடு 11-ம் எண் இல்லத்தை விடச் சிறியதாகும். இருந்த போதிலும் அமைதியான சூழ்நிலையில் இந்த வீடு அமைந்து இருப்பதாலும் அந்த வீடு தனக்கும், குடும்பத்தினருக்கும் மிகவும் பிடித்து இருப்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

