மீண்டும் ஓர் ஏவுகணைச் சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. உலக நாடுகள் எதிர்ப்பையும் மீறி வடகொரியா கடந்த சில வாரங்களாகவே தொடர்ச்சியாக ஏவுகணைச் சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் அமெரிக்கா கூட்டு படையுடன் சேர்ந்து ஏவுகணைச் சோதனைகள் நடத்த்உ வருகிறது.
இந்தநிலையில் இன்று(அக்டோபர் 28) வடகொரியா மீண்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்து உள்ளது.
இந்த ஏவுகணை கிழக்கு கடல் பகுதியை நோக்கி சீறிப் பாய்ந்ததாகத் தெரியவந்தது. இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.

