அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்த மலேசிய முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரி

அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்த மலேசிய முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரி

1 mins read
a8accb21-c1e9-4d26-a3b2-198e6301e373
-

கோலா­லம்­பூர்: மலே­சிய முன்­னாள் தலை­மைச் சட்ட அதி­காரி டாம்மி தாம­சின் சர்ச்­சைக்­கு­ரிய வாழ்க்கை நினை­வுக் குறிப்பு, தேர்­தல் விவ­கா­ர­மாக உரு­வெ­டுத்­துள்­ளது. வன்­மு­றை­யைத் தூண்டு­தல், கல­கம் ஏற்­ப­டுத்­து­வது, அவ­தூறு போன்ற அம்­சங்­க­ளைக் கொண்­டி­ருந்த நூலுக்­குச் சொந்தக்­கா­ரர் விசா­ரிக்கப்­பட்டு வரும் வேளை­யில் அவரை நிய­மித்­த­தற்­காக பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணியை தேசிய முன்­ன­ணிக் கூட்­டணி குறை­கூ­று­கிறது.

இந்­நி­லை­யில், தமது நூல் மீது விசா­ரணை நடத்த பரிந்­து­ரைத்த பணிக்­கு­ழுவை அமைத்­த­தற்­காக அர­சாங்­கத்­திற்கு எதி­ராக திரு தாமஸ் வழக்கு தொடர்­கி­றார்.

எழுத்­து­பூர்வ சட்ட அதி­கா­ரத்­தின்­கீழ் பணிக்­குழு உறுப்­பி­னர்­கள் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தால் இது சட்­ட­வி­ரோ­த­மா­னது என்று அவர் கூறி­னார்.

2018 பொதுத் தேர்­த­லில் தேசிய முன்­ன­ணி­யைத் தோற்­க­டித்து பக்­கத்­தான் ஹரப்­பான் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­ய­தைத் தொடர்ந்து, அதே ஆண்டு ஜூன் மாதம் தலை­மைச் சட்ட அதி­காரி­யாக திரு தாமஸ் நிய­மிக்­கப்­பட்­டார். மலாய் முஸ்­லிம் அல்­லாத முத­லா­வது தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யாக இருந்த இவர், 2020 பிப்ர­வரி­யில் பக்­கத்­தான் ஹரப்­பான் ஆட்சி கவி­ழும்­வரை அந்­தப் பதவி­யில் நீடித்­தார்.