பெர்லின்: ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் இருந்து புறப்பட்டு ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் வந்திறங்கிய லுஃப்தான்சா விமானத்தின் கீழ்ப்பகுதியில் சடலம் ஒன்று கண்டறியப்பட்டது.
எல்எச்601 விமானத்திலிருந்து பயணிகள் வெளியேறிய பிறகு, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக விமானக் கொட்டகை கட்டடத்திற்கு அந்த விமானம் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, விமானத்தின் கீழ்ப்பகுதியில் சடலைத்தை ஊழியர்கள் கண்டறிந்தனர்.
லுஃப்தான்சா இணையப் பக்கத்தின்படி, வேறொரு நகருக்கு நேற்று புறப்படவிருந்த அந்த விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது.
லுஃப்தான்சா விமான நிறுவனமும் மத்திய காவல்துறையும் இந்தச் சம்பவம் குறித்து கருத்துரைக்க மறுத்துவிட்டன.

