போதைப்பொருள் கடத்தல்: பேங்காக்கில் சிங்கப்பூரர்கள் இருவர் கைது

போதைப்பொருள் கடத்தல்: பேங்காக்கில் சிங்கப்பூரர்கள் இருவர் கைது

1 mins read
9276e997-b3e1-406a-8f2a-a364ef6998f9
பிடிபட்டவர்கள் 34 வயது ஓங் ‌ஷா ஸியோங், 53 வயது லோ கின் அங் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: தாய்லாந்து காவல்துறை -

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தாய்லாந்தில் சிங்கப்பூரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத இரவு நேர நடவடிக்கைகளைக் குறிவைத்து பேங்காக், அதைச் சுற்றிய பகுதிகளில் அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின்போது அவர்கள் பிடிபட்டனர்.

தாய்லாந்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிடிபட்டவர்கள் 34 வயது ஓங் ‌ஷா ஸியோங், 53 வயது லோ கின் அங் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து போதை மாத்திரைகள், 'கோக்கென்' உள்ளிட்ட வெவ்வேறு விதமான போதைப் பொருள்களைக் காவல்துறையினர் கைப்பற்றினர்.

அத்துடன், சட்டவிரோதமாக தாய்லாந்திற்குள் நுழைந்தது, சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமையன்று பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடிச் சோதனையின்போது 200க்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சீன நாட்டவர்கள் என்று உள்ளூர் ஊடகச் செய்தி கூறுகிறது.