குறுகிய காணொளிகளைப் பார்க்க விரும்புவோருக்காக 2020 செப்டம்பரில் 'ஷார்ட்ஸ்' பிரிவை யூடியூப் அறிமுகப்படுத்தியிருந்தது.
இப்போது யூடியூப் வெளியிட்டுள்ள வலைப்பதிவு ஒன்றில் 'சேனல்' பக்கத்தில் 'ஷார்ட்ஸ்', 'நேரலை' (லைவ் ஸ்ட்ரீம்), காணொளிகள் ஆகிய பிரிவுகளுக்கு தனித்தனியாக 'டேப்'களை அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
காணொளி உருவாக்குநரின் 'சேனல்' பக்கத்தை ஆராயும்போது தங்களுக்கு மிகவும் பிடித்தமான உட்பொருளைப் பார்வையாளர்கள் காண இந்த மாற்றம் வகைசெய்யும் என்று யூடியூப் நிறுவனம் கூறியது.
இந்தப் புதுப்பிப்பு வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என யூடியூப் தெரிவித்தது.
டிக்டாக் வெளியானதில் இருந்து இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் குறிகிய நேர காணொளி அமைப்பை வழங்கத் தொடங்கிவிட்டன. அந்த வகையில் யூடியூப் 'ஷார்ட்ஸ்', டிக்டாக் போட்டியாளராக கூகல் அறிமுகம் செய்த சேவையாகும்.


