போர்வீரர்களைச் சேர்ப்பதை ர‌ஷ்யா நிறுத்தியது

போர்வீரர்களைச் சேர்ப்பதை ர‌ஷ்யா நிறுத்தியது

1 mins read
a85beb9b-1229-4765-a4c2-1c1e39fad4fc
-

கெர்சான்: உக்ரேனில் சண்டையிடுவதற்காக முன்பு ராணுவப் பயிற்சி பெற்றவர்களை அழைப்பதை நிறுத்திவிட்டதாக வெள்ளிக்கிழமையன்று ர‌ஷ்யா சொன்னது. ஒரே மாதத்தில் பல்லாயிரக்கணக்கான வீரர்களைச் சேர்த்துவிட்ட ர‌ஷ்யா, அவர்களில் கால்வாசிப் பேரை உக்ரேன் போர்க்களத்திற்கும் அனுப்பிவிட்டது.

ஆனால், ர‌ஷ்யாவின் இந்தக் கூற்றை தாம் நம்பவில்லை என்று உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி சொன்னார்.

இதற்கிடையே, ஆயுதங்கள், வெடிமருந்துகள், ராணுவத் தளவாடங்கள் உட்பட

275 மில்லியன் அமெரிக்க டாலர் ($390 மில்லியன்) மதிப்பிலான ராணுவ உதவியை உக்ரேனுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.