டுவிட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யவுள்ள இலோன் மாஸ்க்

டுவிட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யவுள்ள இலோன் மாஸ்க்

1 mins read
5945d8a8-7be5-465b-bfb4-85b060380af3
படம்: ஏபி -

டுவிட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை இவ்வாரமே தொடங்க நிறுவனத்தை வாங்கியுள்ள இலோன் மாஸ்க் முடிவெடுத்துள்ளார். ஆட்குறைப்பு நடவடிக்கை நவம்பர் 1ஆம் தேதிக்குள் இடம்பெறும் எனக் கூறப்பட்டது.

நிறுவனத்தின் 75 விழுக்காடு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என நம்பப்படுகிறது. நிறுவனத்தில் மொத்தம் 7,500 பேர் வேலை பார்க்கின்றனர். எனினும், பணிநீக்கம் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

நிறுவனத்தை சில தினங்களுக்கு முன் வாங்கிய இலோன் மாஸ்க், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தலைமை நிதி அதிகாரி உள்ளிட்ட நான்கு மூத்த அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்துள்ளார்.