பேய் விழா: 20 பேர் கைது

பேய் விழா: 20 பேர் கைது

1 mins read
1187cbf8-f8b0-41dc-939f-b3dc2d1cbffe
-

கோலாலம்பூர்: மலேசியாவின் இஸ்லாமிய சமய அதிகாரிகள், பெரிய அளவில் நடந்த பேய் விழாவில் (ஹாலோவீன்) புகுந்து சோதனை நடத்தி 20 பேரைக் கைதுசெய்தனர்.

அந்த நிகழ்ச்சியில் ஓரினப் புணர்ச்சியாளர்கள், திருநங்கைகள் அதிகம் கலந்துகொண்டனர்.

ஆபாசமாக உடை அணிந்திருந்தது, பாலியல் செயல்களுக்கு ஊக்க மூட்டியது ஆகியவற்றின் தொடர்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கோலாலம்பூரில் சனிக்கிழமை பின்னேரத்தில் 1,000 பேர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் கைது செய்யப்பட்டவர்களில் நுமான் அஃபிபி என்பவரும் ஒருவர். கைது நடவடிக்கை பயங்கரமானது என்றாரவர்.

காவல்துறை ஆதரவுடன் ஏறத்தாழ 40 சமய அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து இசை, நடனங்களை நிறுத்தியதாக அவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.