மன்னிப்பு கேட்டுக்கொண்ட திருடன்

மன்னிப்பு கேட்டுக்கொண்ட திருடன்

1 mins read
28683e1d-b070-4ed9-b335-2b0788d71995
படம்: Zweli_Thixo/டுவிட்டர் -

தன்னுடைய மடிக்கணினி தொலைத்த ஒருவர் தனக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவத்தை டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். அவருடைய கணினியைத் திருடியவன் அவருக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பியுள்ளான். அதில் கணினியைத் திருடியதற்காக ஆடவரிடம் அவன் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த Zweli Thixo என்பவரின் மடிக்கணினி திருடப்பட்டது. அதில் அவருடைய முக்கிய ஆவணங்கள் இருந்தன.

திருட்டுச் சம்பவம் நடந்த அடுத்த நாள் அவருக்கு மின்னஞ்சல் ஒன்று கிடைத்தது. அதை அனுப்பியவன் கணினியைத் திருடியவன். கணினியைத் திருடியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட அவன், தன்னுடைய வறுமையின் சூழ்நிலையால் அவ்வாறு செய்ததாக குறிப்பிட்டுள்ளான். கணினியில் இருந்த முக்கிய ஆவணங்களை உரிமையாளரிடம் அனுப்பிவைக்க அவன் முன்வந்தான். ஏனினும் கணினியைத் திருப்பிதருவதாக இல்லை. அதை விற்கபோவதாக அவன் கூறியுள்ளான்.

இந்தப் பதிவை கண்ட பலரும் திருடனின் நிலையை நினைத்து மனம் இரங்கினர். அவனுக்கு யாராவது வேலை அளிக்குமாறு அவர்கள் கோரினர். ஒருசிலர் அவன் மிக கண்ணியமான திருடன் என்று கருத்துரைத்தனர்.