மெய்நிகரில் பிரசாரம்

மெய்நிகரில் பிரசாரம்

2 mins read
635f5959-3764-4b00-82ef-5f4f96e88a9a
-

புத்­தி­ர­ஜெயா: அடுத்த மலே­சி­யப் பொதுத் தேர்­த­லின்போது வேட்­பா­ளர்­கள் யாரே­னும் கொவிட்-19 கிருமித்­தொற்­றுக்கு ஆளா­னால் அவர்­கள் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்­ள­வேண்­டும் என்று அந்­நாட்டின் இடைக்கால சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தெரிவித்துள்ளார். எனி­னும், அவர்­கள் தேர்­த­லில் வாக்­களிக்க அனு­மதி வழங்­கப்­படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

அந்த வகை­யில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான வாக்­கா­ளர்­க­ளுக்­கான விதி­மு­றை­களை மலே­சி­யா­வின் தேர்­தல் ஆணை­யம் அறி­விக்­க­வுள்­ளது.

"கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னோருக்­கான விதி­மு­றை­களை தேர்­தல் ஆணை­யம் அறி­விக்­க­வுள்­ளது. இது அவர்­கள் வாக்­க­ளிக்க வகை­செய்­யும். கார­ணம், வாக்­க­ளிப்­பது அவர்­க­ளின் அர­சி­யல் உரிமை," என்று திரு கைரி செய்­தி­யா­ளர் கூட்­டத்தில் சுட்­டி­னார்.

"கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான வேட்­பா­ளர் தன்னை சில நாள்­களுக்­குத் தனி­மைப்­ப­டுத்­திக்கொள்­ள­வேண்­டும். ஆனால், அவர் இணை­யத்­தில் பிர­சா­ரம் செய்­ய­லாம். அது­தான் பொறுப்­பான செயல்," என்­றும் அவர் குறிப்­பிட்டார். கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வோர் பொது­வாக மூன்­றி­லி­ருந்து நான்கு நாள்­களில் குண­ம­டை­வர் என்­பதை திரு கைரி தெரி­வித்­தாார்.

குறு­க­லான இடங்­களில் முகக்­க­வ­சம் அணிந்து வேட்­பாளர்­களும் அர­சி­யல் கட்­சி­களும் முன்­னு­தா­ர­ண­மாக விளங்கவேண்­டும் என்று திரு கைரி சொன்­னார். குறிப்­பாக மூத்த குடி­மக்­கள் இருக்­கும்­போது அல்­லது வீடு வீடா­கச் சென்று பிர­சா­ரம் செய்­யும்­போது இது பொருந்­தும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

தேர்­தல் தினத்­தன்று வழி­மு­றை­களை வரைய தேர்­தல் ஆணை­யத்­திற்­குத் தமது அமைச்சு பரிந்­து­ரை­களை வழங்­கி­யுள்­ள­தாக திரு கைரி தெரி­வித்­தார். மேலும், மலே­சி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரிப்­பதை­யொட்டி முகக்­க­ச­வம் அணி­யு­மாறு திரு கைரி­யின் அமைச்சு மக்களிடம் பரிந்­து­ரைத்­தது.

மலேசிய பொதுத் தேர்தல்: கொவிட்-19 தொற்று ஏற்பட்ட வேட்பாளர்கள் வாக்களிக்கலாம்