ஏர் ஏஷியாவிலிருந்து பதவி விலகும் டோனி ஃபெர்னாண்டஸ்

ஏர் ஏஷியாவிலிருந்து பதவி விலகும் டோனி ஃபெர்னாண்டஸ்

1 mins read
18ca496c-faaf-481b-b479-ff83bd0e600b
-

கோலா­லம்­பூர்: 'ஏஏ­எக்ஸ்' எனும் ஏர் ஏஷியா எக்ஸ் குழு­மத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி பொறுப்­பி­லி­ருந்து திரு டோனி ஃபெர்னாண்­டஸ் வில­கிக்­கொண்­டுள்­ளார். இவ்­வாண்டு ஜூலை மாதம் எட்­டாம் தேதி­யன்று ஏர் ஏஷியா குழு­மத்­தின் தற்­கா­லிகத் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யாக திரு ஃபெர்னாண்டஸ் நிய­மிக்­கப்­பட்டார். வேறு பொறுப்­பு­கள் தனக்கு இருந்­த­தால் இந்­தப் பொறுப்­பிலிருந்து வில­கிக்­கொண்­ட­தாக திரு ஃபெர்னாண்­டஸ் கூறி­னார் என்று சில தக­வல்­கள் வெளி­யாயின.

ஏர் ஏஷி­யா­வின் நிர்­வா­கத் தலை­வ­ரான துங்கு மஹ்­முத் ஃபாவ்ஸி, தாய்­லாந்­தின் ஏர் ஏஷியா பிரி­வின் நிர்­வா­கக் குழு­வில் இடம்­பெ­றாத சுயேச்சை இயக்­கு­ந­ராக நிய­மிக்­கப்­ப­டு­வார் என்றும் நேற்று வெளியிடப்பட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.