பிரேசிலுக்கு மீண்டும் இடதுசாரித் தலைவர்

பிரேசிலுக்கு மீண்டும் இடதுசாரித் தலைவர்

1 mins read
128bec1c-776d-41d2-901d-ba593b1ce1c0
-

ரியோ டி ஜெனிரோ: பிரே­சி­லின் முன்­னாள் அதி­பர் லூயிஸ் இனா­சியோ லுலா ட சில்வா மீண்­டும் அதி­பர் தேர்­த­லில் வெற்­றி­பெற்­றுள்­ளார். இடதுசாரித் தலைவரான அவர் தேர்­த­லுக்கு முன்பு பத­வி­யில் இருந்த வல­து­சா­ரித் தலை­வர் ஜாயர் பொல்­சொ­னா­ரோவை வென்­றார். திரு லுலா 50.9 விழுக்­காடு வாக்­கு­க­ளைப் பெற்­றார்.

சென்ற பிரே­சி­லிய அதி­பர் தேர்­தலின்­போது சிறை­யில் இருந்­த­தால் திரு லுலா போட்­டி­யி­ட­வில்லை. இந்த வெற்றி அவர் மீண்டு வந்ததற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.