'சீனப் புத்தாண்டுக்கு இப்போதே மீன்களை வாங்குங்கள்'

'சீனப் புத்தாண்டுக்கு இப்போதே மீன்களை வாங்குங்கள்'

1 mins read
8fcca26f-cb8e-47b7-a1dd-2d853cdeaf92
-

ஜார்ஜ்­ட­வுன்: சீனப் புத்­தாண்­டுக்கு இன்­னும் சுமார் மூன்று மாதங்­கள் உள்­ளன. இருந்­தா­லும் அதை முன்­னிட்டு இப்­போதே மீன்­களை வாங்கி வைத்­துக்­கொள்­ளு­மாறு மலே­சி­யா­வில் பய­னீட்­டார்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­னர்.

மலே­சி­யா­வில் உள்ள பல்­வேறு மீன­வர் சங்­கங்­கள் இந்த அறி­வு­ரையை வழங்­கு­கின்­றன. பரு­வ­நிலை எதிர்­பாரா வகை­யில் இருப்­ப­தால் மீன­வர்­கள் கட­லுக்­குச் செல்ல சிர­மப்­ப­டு­வது அதற்­குக் கார­ணம்.

மலே­சி­யா­வில் பொது­வாக ஆண்­டி­று­தி­யில் மழைக்­கா­லம் வரும். இப்­போது அதற்கு முன்­னரே அந்­நாட்­டில் பரு­வ­நிலை மோச­ம­டை­வ­தாக சில மீன­வர் சங்­கங்­கள் தெரி­வித்­துள்­ளன. அத­னால் மீன­வர்­கள் கட­லுக்­குச் செல்­வது குறைந்­துள்­ளது.

முன்­ன­தாக வாரந்­தோ­றும் கட­லுக்­குச் சென்ற மலே­சிய மீன­வர்­கள் இப்­போது இரண்டு வாரங்­களுக்கு ஒரு­முறை மட்­டுமே மீன் பிடிக்­கச் செல்­கின்­ற­னர். சிலர் மாதத்­திற்கு ஒரு­முறை மட்டும் மீன் பிடிக்­கப் போகின்றனர்.

மீன்­ விலை கணிசமாக அதிகரிக்கக்கூடும். அதனால் இப்­போதே வாங்கி அவற்­றைப் பழைய செய்­தித்­தாள்­களில் சுரு­ட்டி வைக்கு­மாறு பய­னீட்­டா­ளர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­னர்.

அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் 22ஆம் தேதி சீனப் புத்­தாண்­டின் முதல் நாள். அதற்கு ஓரிரு நாள்­களுக்கு முன்பு பல குடும்­பங்­கள் கூட்டு இரவு விருந்­துக்கு ஒன்­று­கூ­டு­வது வழக்­கம்.