வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா, புற ஊதாக் கதிரில் காணக்கூடிய சூரியனின் படத்தை அண்மையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளது.
கேலிச் சித்திரக் கதைகளில் சித்திரிக்கப்படுவதுபோலவும் சிரிப்பைப் பிரதிபலிக்கும் 'இமோஜி' எனப்படும் குறியீடு போன்றும் சூரியன் அதில் காணப்படுகிறது.
ஆனால் இது குளிர்ச்சியான கருந்துளைகளைக் காட்டுவதாகவும் இவற்றின்வழி மணிக்கு 2.9 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் வெப்பக் காற்று விண்வெளியில் பாய்கிறது, பூமிக்கு இது மகிழ்ச்சிச் செய்தி அல்ல என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
படம்: நாசா