லண்டன்: பிரிட்டனில் 1987ல் இரு பெண்களின் கழுத்தை நெறித்துக் கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைக்குச் சென்ற டேவிட் ஃபுலர், 68, மேலும் 51க்கு மேற்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டார். ஃபுலர் தற்போது ஆயுள் தண்டனையை நிறைவேற்றுகிறார்.
மருத்துவமனையில் வேலை செய்த ஃபுலர், 2008லிருந்து 2020ஆம் ஆண்டு வரை மருத்துவமனை சவக்கிடங்குகளிலிருந்த 78 சடலங்களுடன் பாலியல் உறவு கொண்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நேற்று நடந்த நீதிமன்ற விசாரணையில், மேலும் 23 பெண் சடலங்களுடன் அவர் பாலியல் கொண்டதாக தெரிவித்தார்.
ஃபுலரின் வீட்டில் காவலர்கள் சோதனை மேற்கொண்டதில், ஃபுலர் தனது குற்றச்செயல்களைக் காணொளியாகப் பதிவு செய்தார் என்று தெரியவந்தது. இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

