பெய்ஜிங்: கொவிட்-19 முடக்கநிலை நடப்பில் இருக்கும்போது, மருத்துவ உதவி தாமதமானதால், மூன்று வயது சிறுவன் நச்சுவாயு பாதிப்பால் இறக்க நேரிட்டது. இதற்காக சீன அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.
சீனாவில் உள்ள லன்சோவ் நகரம் கடந்த ஒரு மாதமாக முடக்கநிலையில் உள்ளது. நேரத்திற்கு அவசர மருத்துவ சேவை கிடைக்காத நிலையை வெளியிடாமல், காவல் துறை செவ்வாய்க்கிழமை அன்று சிறுவனின் மரணத்தை அறிவித்தது. அவசர மருத்துவ சேவைக்கு பலமுறை தொடர்புகொண்டும், 90 நிமிடங்களுக்குப் பிறகு, மருத்துவ வண்டி சிறுவனை வந்தடைந்தது என்று அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

