3,700 ஊழியர்களை நீக்கத் தொடங்குகிறது டுவிட்டர்

3,700 ஊழியர்களை நீக்கத் தொடங்குகிறது டுவிட்டர்

1 mins read
95a6bc3e-d644-4a45-92ba-f4e4dfe07b0f
-

சான் ஃபிரான்­சிஸ்கோ: டுவிட்­டர் நிறு­வன ஊழி­யர்­களில் யார் யார் வேலை நீக்­கம் செய்­யப்­

ப­டு­வார்­கள் என்ற விவ­ரம் சிங்­கப்­பூர் நேரப்­படி இன்று நள்­ளி­ரவு முதல் தெரி­ய­வ­ரும். இது­

கு­றித்து அந்­நி­று­வ­னம் தனது ஊழி­யர்­க­ளுக்கு வியா­ழக்­

கி­ழமை மின்­னஞ்­சல் அனுப்பி உள்­ளது.

"டுவிட்­டரை ஆரோக்­கி­ய­மான வழி­யில் கொண்­டு­செல்ல உல­க­ள­வி­லான அதன் ஊழி­ய­

ர­ணி­யைக் குறைக்­கும் கடி­ன­மான நடை­மு­றையை வெள்­ளிக்­கி­ழமை (பசி­பிக் நேரம்) செயல்

­ப­டுத்­து­கி­றோம்," என்று குறிப்­பி­டப்­பட்ட அந்த மின்­னஞ்­ச­லைக் கண்­ட­தாக ராய்ட்­டர்ஸ் கூறி­யது.

அது­வரை தனது அலு­வ­ல­கங்­களை தற்­கா­லி­க­மாக மூடி வைக்­க­வும் அலு­வ­ல­கங்­க­ளுக்­குள் நுழை­வ­தற்­கான அனு­ம­தி ­யைத் தற்­கா­லி­க­மா­கத் தடை செய்­ய­வும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தாக டுவிட்­டர் நிறு­வ­னம் தெரி­வித்­தது. ஊழி­யர்­கள், டுவிட்­ட­ரின் கட்­ட­மைப்பு மற்­றும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தக­வல்­க­ளைப் பாது­காக்­கும் பொருட்டு இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

டுவிட்­ட­ரின் செல­வு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் அந்­நி­று­வ­னத்­தின் ஊழி­ய­ர­ணி­யைப் பாதி­யா­கக் குறைக்க அதனை அண்­மை­யில் வாங்­கிய செல்­வந்­த­ரான எலான் மாஸ்க் திட்­ட­மி­டு­கி­றார். இந்த சமூக ஊட­கத் தளத்தை அவர் US$44 பில்­லி­யன் (S$62 பில்­லி­யன்) கொடுத்து கடந்த மாதம் வாங்­கி­னார்.

டுவிட்­டர் நிறு­வ­னத்­தில் கிட்­டத்­தட்ட 7,500 பேர் பணி­யாற்­று­வ­தா­க­வும் இவர்­களில் சுமார் 3,700 பேரை ஆட்­கு­றைப்பு செய்ய திரு மாஸ்க் திட்­ட­மி­டு­வ­தா­க­வும் தக­வ­ல­றிந்த வட்­டா­ரங்­கள் கூறின.

யார் யார் வேலை இழப்பார் கள் என்ற தகவல் இன்று நள்ளி ரவில் வெளியாகும் என்பதால் பல ஊழியர்கள் கவலையில் மூழ்கி உள்ளனர்.