விமானச் சேவை தடை: மனம் மாறுகிறது சீனா

விமானச் சேவை தடை: மனம் மாறுகிறது சீனா

1 mins read
92d46676-c920-48d8-b943-396da9d40ddc
-
Google News Preferred Icon

பெய்ஜிங்: கொவிட்-19 நோயாளிகளை ஏற்றி வந்ததற்காக விமானங்களைத் தடை செய்யும் திட்டம் முடிவுக்கு வருகிறது. தற்காலிகத் தடைவிதிக்கும் திட்டத்தைக் கைவிட சீனா முடிவு செய்துள்ளதாக தகவல் அறிந்தோர் கூறினர். கொவிட்-19 தொற்று அறவே இல்லாத தனது கொள்கையின் தாக்கத்தைத் தணிக்கும் முயற்சியில் அந்நாடு இறங்கியுள்ளது. கடுமையைக் கைவிடுமாறு அரசாங்க சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட அரசாங்க அமைப்புகளை சீனாவின் தலைமைத்துவம் கேட்டுக்கொண்டுள்ள தாக பெயர் வெளியிட விரும்பாத அதி காரிகள் கூறினர். கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பயணிகளை சீனாவில் இறக்கிவிடும் விமானங்களின் சேவையை நோயாளிகளின் எண்ணிக் கையைப் பொறுத்து ஒரு வாரம் முதல் இரு வாரங்களுக்குத் தடை செய்யும் நடைமுறை சீனாவில் நடப்பில் உள்ளது.