சான் ஃபிரான்சிஸ்கோ: டுவிட்டர் நிறுவனம் ஒரு நாளைக்கு நான்கு மில்லியன் டாலருக்கும் (5.61 மில்லியன் வெள்ளி) அதிகமான தொகையை இழந்து வந்ததால் ஆட்குறைப்பு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அதன் புதிய உரிமையாளர் எலோன் மஸ்க் கூறியுள்ளார். திரு மஸ்க் டுவிட்டரை வாங்கிய பிறகு அந்நிறுவனத்தின் ஊழியர்களில் பாதி பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.
தாங்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டதைப் பற்றி டுவிட்டர் ஊழியர்கள் பலர் அதன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
இதற்கிடையே, திரு மஸ்க் டுவிட்டரை வாங்கிய பிறகு அதில் இடம்பெறும் கருத்துகளைச் சரிபார்த்து வடிகட்டும் நடவடிக்கை தளர்த்தப்படலாம் என்ற கவலையும் எழுந்தது. அது குறித்துப் பேசிய அவர், இதன் தொடர்பில் நிறுவனத்தின் கொள்கைகளில் மாற்றம் ஏதும் இருக்காது என்று குறிப்பிட்டார்.
திரு மஸ்க் டுவிட்டரை வாங்கிய பிறகு உலகளவில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.

