மலேசியாவில் வெள்ளிக்கிழமை இரவு அன்று நிகழ்ந்த வாகன விபத்தில் 25 வயது சிங்கப்பூரர் ஒருவர் மரணம் அடைந்தார். அவர் பயணம் செய்த வாகனம் சருக்கி, சாலை தடுப்பில் மோதியது எனக் கூறப்பட்டது.
விபத்தில் ஹோங் காய்தீங் எனும் பெண் சம்பவ இடத்திலே மாண்டதாக மலேசியாவின் தி ஸ்டார் நாளிதழ் குறிப்பிட்டது.
வடக்கு-மேற்கு விரைவுச்சாலையில் விபத்து ஏற்பட்டது. ஹோங் ஜோகூரிலிருந்து கோலாலம்பூருக்கு பயணம் செய்துகொண்டிருந்தபோது விபத்து நேர்ந்ததாக அலோர் காஜா காவல்துறை கண்காணிப்பாளர் குறிப்பிட்டார்.
குமாரி ஹோங்குடன் வாகனத்தில் மூவர் இருந்ததாக அவர் தெரிவித்தார். மற்றொரு பயணியான 27 வயதான கென்னத் ஃபோங்கிற்கு காயம் ஏற்படவில்லை. வாகன ஓட்டுநரான முகமது ஹில்மி அப்துல் ரஹிம், 28, என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார்.
விபத்து குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.