இந்தியாவில் 90 விழுக்காடு டுவிட்டர் ஊழியர்கள் பணிநீக்கம்

இந்தியாவில் 90 விழுக்காடு டுவிட்டர் ஊழியர்கள் பணிநீக்கம்

2 mins read
42305fea-5c99-41ce-90b9-3b75214d9d99
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் டுவிட்­டர் நிறு­வ­னம் அதன் 90 விழுக்­கா­டுக்­கும் அதி­க­மான ஊழி­யர்­க­ளைக் கடந்த வார­யி­று­தி­யில் பணி­நீக்­கம் செய்­தது. இந்­தி­யா­வில் 200க்கும் அதி­க­மா­னோர் டுவிட்­ட­ருக்­காக பணி­யாற்றி வந்­த­னர். பணி­நீக்­கத்­தைத் தொடர்ந்து இப்­போது டசன் கணக்­கா­னோரே எஞ்­சி­யுள்­ள­தாக இந்த விவ­கா­ரம் பற்றி அறிந்­த­வர்­கள் கூறி­னர்.

இந்தியாவில் குறைக்கப்பட்ட 70 விழுக்காடு வேலைகள் பொருள், பொறியியல் குழுவைச் சேர்ந்தவை.

புதுடெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய பெருநகர்களில் டுவிட்டர் அலுவலகங்கள் அமைந்துள்ளன.

பெரும் செல்­வந்­த­ரான எலன் மஸ்க், டுவிட்­டர் நிறு­வ­னத்தை US$44 பில்­லி­ய­னுக்கு (S$62பி.) கைய­கப்­ப­டுத்­தி­ய­தைத் தொடர்ந்து, கடந்த வாரம் உலகம் முழுவதும் பாதி­ அளவு ஊழி­யர்­கள் ஆட்­குறைப்பு செய்­யப்­பட்­ட­னர்.

ஆனால், பணி­நீக்­கம் செய்­யப்­பட்­ட­வர்­களில் டசன் கணக்­கானோரை பணிக்­குத் திரும்­பக் கோரி டுவிட்­டர் முயற்சி எடுத்து வரு­வ­தாக புளூம்­பர்க் நியூஸ் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

பணிக்­குத் திருப்பி அழைக்­கப்­படு­ப­வர்­களில் சிலர் தவ­று­தலாக பணி­நீக்­கம் செய்­யப்­பட்­ட­வர்­கள். வேறு சிலரோ, திரு மஸ்க் விரும்­பும் அம்­சங்­க­ளைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்குத் தேவை­யான அனு­ப­வத்­தைக் கொண்­டி­ருப்­பதை நிர்­வா­கம் உணர்ந்­துள்­ள­தாக அச்­செய்தி அறிக்கை குறிப்­பிட்­டது.

இதற்­கி­டையே, உல­கம் குறித்த ஆக துல்­லி­ய­மான தக­வலை வழங்­கும் தள­மா­வதே டுவிட்­ட­ரின் இலக்கு என்று திரு மஸ்க் கூறி­ இருக்­கி­றார். ஆனால், இந்த நிலையை டுவிட்­டர் எவ்­வாறு எட்டும் என்­பது பற்­றி­யும் எது துல்­லி­ய­மா­னது என்­பதை யார் தீர்­மானிப்­பார் என்­பது குறித்­தும் விவாதம் எழுந்­துள்­ளது.

டுவிட்­டரை தாம் கைய­கப்­ப­டுத்­தி­ய­தில் இருந்து அதன் வரு­வாய் கணி­ச­மா­கக் குறைந்­த­தாக திரு மஸ்க் கூறி­யி­ருப்­பது, அந்த நிறு­வனத்­தின் நிதி நில­வ­ரம் நிலை­யில்­லா­மல் இருப்­ப­தைக் காட்­டு­வ­தாக நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.