கெர்சன்: ரஷ்யாவுக்கு எதிரான போரில் இழந்த பல நிலப்பகுதிகளை உக்ரேன் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்தப் பகுதிகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்
பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அந்த இடங்களிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கிவிட்டதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்தது.
கெர்சன் மாநிலத்தின் தலை
நகரிலிருந்து தனது படைகளை மீட்டுக்கொள்வதாக ரஷ்யா அறிவித்திருந்தது.
ரஷ்யப் படைகள் அங்கிருந்து முழுமையாகப் பின்வாங்க குறைந்தது ஒரு வாரம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 40,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் இன்னும் இருப்பதாக உக்ரேன் கூறியது.
ஆனால் கெர்சனிலிருந்து தனது படைகள் முழுமையாகப் பின்வாங்கிவிட்டதாக ரஷ்யா நேற்று தெரிவித்தது.
இந்நிலையில், கெர்சன் நகரை உக்ரேனியப் படைகள் நெருங்குகின்றன.
உக்ரேனின் ராணுவத்தைவிட ரஷ்யாவின் ராணுவம் வலிமைமிக்கது என்று கருதப்படுகிறது.
இருப்பினும், போர் தொடங்கி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் உக்ரேனை ரஷ்யாவால் முழுமையாகக் கைப்பற்ற முடியவில்லை.
இதுவரை மூன்று முறை ரஷ்யப் படைகள் பெருமளவில் பின்வாங்கி விட்டன.
வடக்குப் பகுதியிலிருந்து ஊடுருவி உக்ரேனியத் தலைநகர் கீவ்வைக் கைப்பற்ற ரஷ்யா முதலில் திட்டமிட்டிருந்தது.
ஆனால் உக்ரேனியப் படைகள் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து பதிலடி கொடுத்தன.
இதனால் அந்தத் திட்டத்தை ரஷ்யா கைவிட்டு அங்கிருந்து பின்வாங்கி உக்ரேனின் கிழக்குப் பகுதி யில் கவனம் செலுத்தி வருகிறது.
ஆனால் அங்கும் அது
பெருமளவிலான பின்னடைவு
களைச் சந்தித்து வருவதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.