மயாமி: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தை நிக்கோல் புயல் நேற்று முன்தினம் சூரை
யாடியது.
இதில் குறைந்தது இரண்டு பேர் மாண்டனர். புயல் காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்தன.
இதனால் கிட்டத்தட்ட 350,000 வீடுகளும் வர்த்தகங்களும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின.
அசுர வேகத்தில் வீசிய புயல் காற்றில் சிக்கி பல வீடுகள் சேதம் அடைந்தன.
வீடுகளை இழந்து தவிப்போரை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்
பட்டுள்ளன.