மியன்மாரை தடை செய்ய பரிந்துரை

மியன்மாரை தடை செய்ய பரிந்துரை

1 mins read
5045f0a7-f5b4-4fdf-a2c3-0589f9e1dab0
-

ஜகார்த்தா: ஆசியான் நடத்தும் உச்சநிலை மாநாடுகளிலிருந்து மியன்மாரைத் தடை செய்ய இந்தோனீசியா பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையை இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, ஆசியான் தலைவர்களிடம் நேற்று முன்வைத்தார்.

இதுகுறித்து ஆசியான் தலைவர்கள் நீண்டநேரம் விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.

மியன்மாரில் தொடரும் வன்முறை குறித்து ஆசியான் தலைவர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்ததாக திரு விடோடோ கூறினார்.

மியன்மார் ராணுவம், பிரிவினைவாதிகள், ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் ஆகியோருடன் ஆசியான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார் அவர்.