சொகுசுக் கப்பலில் கொவிட்-19 பரவல்

சொகுசுக் கப்பலில் கொவிட்-19 பரவல்

1 mins read
897faf8e-44be-4d3d-b2c4-f2cb01359de9
'கார்னிவல் ஆஸ்திரேலியா' நிறுவனத்தின் 'மெஜஸ்டிக் பிரின்சஸ்' சொகுசுக் கப்பல். படம்: பிரின்சஸ் குரூசஸ் -
Google News Preferred Icon

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம், சிட்னியில் நிறுத்தப்பட்ட சொகுசுக் கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அங்கு கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் நடப்பில் உள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

சிட்னியில் நிறுத்தப்பட்டுள்ள 'கார்னிவல் ஆஸ்திரேலியா' நிறுவனத்தின் 'மெஜஸ்டிக் பிரின்சஸ்' சொகுசுக் கப்பலில் பயணம் செய்த 800 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே மாநில சுகாதார அதிகாரிகள், பெருமளவில் கிருமி பரவுவதற்கான வாய்ப்புள்ளதைக் குறிக்கும் மூன்றாவது கட்ட அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2020ல் 'ரூபி பிரின்சஸ்' சொகுசுக் கப்பலில் பயணம் செய்த 914 பேர் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். அவர்களில் 28 பேர் மாண்டுவிட்டதாக அப்போது கூறப்பட்டது.