உக்ரேனின் கட்டுப்பாட்டுக்குள் வந்த கெர்சான்; மகிழ்்ச்சியில் மக்கள்

உக்ரேனின் கட்டுப்பாட்டுக்குள் வந்த கெர்சான்; மகிழ்்ச்சியில் மக்கள்

2 mins read
e73abab8-225f-431b-971c-66c971cfceca
கெர்சானின் பலஹோடட்னே கிராமத்தைச் சேர்ந்த 64 வயது மூதாட்டி நரக வாழ்க்கையில் இருந்து விடுதலை கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக சொன்னார். படம்: நியூயார்க் டைம்ஸ் -

கெர்­சான்: கெர்­சான் பகு­தியை கைப்­பற்­றி­விட்­ட­தாக உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்கி அறி­வித்­தார்.

உக்­ரே­னின் சிறப்­புப் படை வீரர்­கள் கெர்­சா­னுக்­குள் நுழைந்­து­விட்­ட­தாக டெலி­கி­ரா­மில் பதி­விட்­டி­ருந்த அவர், கெர்­சான் மக்­க­ளு­டன் உக்­ரே­னிய வீரர்­கள் நிற்­கும் காணொ­ளி­யை­யும் வெளி­யிட்டு இருந்­தார்.

கெர்­சான் பகு­தி­யில் இருந்து தமது படை­க­ளைத் திரும்­ப பெற்றுக்­கொள்­வ­தாக ர‌ஷ்யா இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு அறி­வித்­தி­ருந்­ததைத் தொடர்ந்து உக்ரேனிய வீரர்கள் அங்கு நுழைந்­த­னர்.

நக­ரின் முக்­கிய பகு­தி­களில் அவர்­கள் உக்­ரே­னி­யக் கொடியை ஏற்­றும் காட்­சி­களும் அவா்க­ளைப் பொது­மக்­கள் உற்­சா­கத்­து­டன் வர­வேற்­கும் காட்­சி­களும் சமூக ஊட­கங்­களில் வலம் வரு­கின்­றன.

கெர்­சான் சதுக்­கத்­தில் இரவு நேரத்­தில் ஒன்­று­கூடி பொது­மக்­கள் மகிழ்ச்­சி­யு­டன் தேசிய கீதம் பாடும் காணொ­ளியை உக்­ரே­னிய நாடாளு மன்­றம் வெளி­யிட்­டுள்­ளது.

கெர்­சா­னில் உக்­ரே­னிய தொலைக்­காட்சி சேவை மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கி­யுள்­ளது.

"ர‌ஷ்­யப் படை­யினா் அந்த நக­ரி­லி­ருந்து வெளி­யே­றிய பாதையை உன்­னிப்­பாக கண்­கா­ணித்­துக்­கொண்­டு­தான் இருக்­கி­றோம். கெர்­சா­னுக்­குள் நுழை­யும் உக்­ரேன் படை­யி­ன­ருக்கு எதி­ராக யாரா­வது செயல்­பட்­டால் அது தடுத்து நிறுத்­தப்­படும்," என்று உக்­ரே­னி­யப் பாது­காப்­புத் துறை­யின் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

மேலும், நக­ரில் பதுங்­கி­யி­ருக்­கக்­கூ­டிய ர‌ஷ்­யப் படை­யி­ன­ரைத் தேடும் நட­வ­டிக்கை நிறை­வ­டை­யும் வரை பொது­மக்­கள் வீட்­டிற்­குள்­ பா­து­காப்­பாக இருக்­கும்­படி அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

உக்­ரே­னிய வெளி­யு­றவு அமைச்­சர் டிமெட்ரி குலேபா, "போர்க்­களத்­தில் வெற்­றி­ பெற்று வரு­கி­றோம். இருப்­பி­னும், ர‌ஷ்­யா­வின் பிடி­யில் உக்­ரேனை விடு­விப்­ப­தற்­கான போர் தொடர்­கிறது," என்­றார்.

ர‌ஷ்­யா­மீது பொரு­ளா­தாரத் தடை­கள் விதிப்­பது குறித்த ஆசி­யான் நாடு­க­ளின் அணு­கு­மு­றை­களை ஏற்­றுக்­கொண்ட குபேலா, எனினும் உக்­ரே­னுக்கு ஆத­ர­வ­ளிக்க பல்­வேறு வழி­கள் இருப்­ப­தா­க­வும் ஆசியா, உல­கின் மற்ற நாடு­க­ளுக்­கான உணவு ஏற்­று­ம­தியை உக்ரேன் உறுதிசெய்­யும் என்­றும் சொன்னார்.