சீனாவுடன் நிலையான உறவு: ஜப்பானியப் பிரதமர் நம்பிக்கை

சீனாவுடன் நிலையான உறவு: ஜப்பானியப் பிரதமர் நம்பிக்கை

2 mins read
3b6c615e-de5e-40a6-ac00-2ac056b7b2f9
-

தோக்­கியோ: ஆக்­கப்­பூர்­வ­மான, நிலை­யான உற­வைக் கட்­டி­யெ­ழுப்ப சீனா­வும் ஜப்­பா­னும் பாடு­படும் என்று தாம் நம்­பு­வ­தாக சீனத் தலை­வர் லி கிகு­வெங்­கி­டம் ஜப்­பா­னியப் பிர­த­மர் கி‌ஷிடா சொன்­ன­தாக

ஜப்­பானிய உள்­துறை அமைச்சு கூறி­யது.

கம்­போ­டி­யா­வில் நடை­பெ­றும் ஆசி­யான் நாடு­க­ளின் கூட்­டத்­தில் பங்­கேற்­ப­தற்­காக சீனா, ஜப்­பான், தென்­கொ­ரியா ஆகியவற் தலை­வர்­களும் அங்கு சென்­றுள்­ள­னர்.

கூட்­டத்­திற்கு முன்­ன­தாக சந்­தித்த சீனா, ஜப்­பா­னின் தலை­வர்­கள் இரு நாட்டு உற­வின் முக்­கி­யத்­து­வம் குறித்து பேசி­னர்.

அடுத்த சில வாரங்­களில் பேங்­காக்­கில் நடை­பெ­ற­வுள்ள அபெக் மாநாட்­டின்­போது கி‌ஷிடா, சீன அதி­பர் ஸி ஸின்­பிங்­கைச் சந்­திப்­ப­தற்­கான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்டு வரு­வ­தாக ஜப்­பா­னிய ஊட­கம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

வட­கொ­ரி­யா­வின் கண்­டம் விட்டு கண்­டம் பாயும் ஏவு­க­ணை­கள், பேர­ழிவு ஆயு­தங்­களை முற்­றி­லு­மாக அழிப்­ப­தற்கு நாடு­க­ளுக்கு இடையே ஒத்­து­ழைப்பு வேண்­டும் என்­றும் கி‌ஷிடா சொன்­னார்.

இந்த மாநாட்­டில், கலந்­து­கொள்­வ­தற்­காக அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னும் கம்­போ­டியா சென்­ற­டைந்­துள்­ளார்.

சீனா, ஜப்­பா­னு­ட­னான உறவை மேம்­ப­டுத்த விரும்­பு­வ­தாக தென்­கொ­ரி­யா­வும் தெரி­வித்­துள்­ளது.

சீனாவை தனது பெரிய வர்த்­தக பங்­கா­ளி­யாக கரு­தும் ஆசிய நாடு­களில் அமெ­ரிக்கா தனது பாது­காப்பு பங்­கா­ளித்­து­வத்­தைப் மேம்­ப­டுத்­து­வ­தற்கு அமெ­ரிக்கா முற்­பட்டு வரு­கிறது.

இவ்­வே­ளை­யில் ஆசி­யான் தலை­வர்­க­ளு­ட­னான பைட­னின் சந்­திப்பு அதை அடுத்த நிலைக்­குக் கொண்டு செல்ல உத­வும் என்று நம்­பு­வ­தாக வெள்ளை மாளிகை கூறி­யது. ஆனால், பைட­னின் இச்­சந்­திப்பு அதற்­கான குறிப்­பி­டத்­தக்க மாற்­றங்­களைக் கொண்டு வராது என்று அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் அல்­ப­னீ­சும் ஆசி­யான் தலை­வர்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வார் என்று கூறப்­பட்­டுள்­ளது.