விமானங்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது இருவர் பலி

விமானங்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது இருவர் பலி

1 mins read
6b74af13-63a6-470a-ac11-c440808956e4
படம்: LOGKA ,@GOLLYITSMOLLIE/டுவிட்டர் -

அமெரிக்காவில் டாலஸ் மாநிலத்தில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதில் இருவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவானலில் விமானங்கள் மோதிக்கொண்டு, தரையில் நொறுங்கின. அவை நொறுங்கிய இடத்தில் தீப் பற்றிக்கொண்டது.

விமானங்களில் எத்தனைப் பேர் இருந்தனர் என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் குறைந்தது இருவர் மாண்டிருக்கக்கூடும் எனக் கூறப்பட்டது. டாலசில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் இந்த விபரீதம் நடந்தது. விபத்துக்குள்ளான விமானங்கள் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டவை என அறியப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானங்கள் மிக அரிய வகை விமானங்கள் என்று நிபுணர்கள் கூறினர். 1936க்கும் 1945க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.