நேப்பாளத்தை மீண்டும் ஒரு நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. உயிர்ச்சேதம், காயமடைந்தவர்கள் ஆகியவற்றை குறித்த தகவல்கள் அளிக்கப்படவில்லை.
5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், இந்தியாவின் சில பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தால் பயந்து பலர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிச் சாலைகளுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
நேப்பாள நிலநடுக்கத்தின் மையம், பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் பதிவானதாகக் கூறப்பட்டது.
நேப்பாளத்தில் சில தினங்களுக்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேர்ந்தது. அதில் குறைந்தது ஆறு பேர் மாண்டதாகவும், பல வீடுகள் தரைமட்டமானதாகவும்தெரிவிக்கப்பட்டது.

