ஈரான் ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 326 பேர் கொல்லப்பட்டனர்

ஈரான் ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 326 பேர் கொல்லப்பட்டனர்

1 mins read
5724845c-e596-4482-aac6-c0646ab83467
படம்: ராய்ட்டர்ஸ் -

ஈரானில் தொடரும் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 326 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நார்வேயில் இயங்கும் 'ஐஹெச்ஆர்' எனும் ஈரான் மனித உரிமை அரசாங்க சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மாண்டவர்களில் 43 சிறுவர்களும் 25 பெண்களும் அடங்குவர் எனக் கூறப்பட்டது.

மஹ்சா அமினி எனும் பெண் சர்ச்சைக்குரிய சூழலில் மரணமடைந்ததைத் தொடர்ந்து ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. 'ஹிஜாப்' எனும் தலையங்கியை சரியாக அணியாததாகச் சொல்லப்பட்டதால் அந்த 22 வயது குர்தியப் பெண் ஈரானின் நன்னடத்தை காவல்துறையினரால் செப்டம்பர் 13ஆம் தேதி கைதுசெய்யப்பட்டிருந்தார். தடுப்புப் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் மூன்று நாட்களுக்குப் பின்னர் மாண்டார்.

ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதில் ஈடுபட்ட ஈரானிய அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் மாண்டதாகக் கூறப்பட்டது.