அன்வார் இப்ராஹிம்: பக்கத்தான் ஹரப்பானே ஆட்சியமைக்கும்

அன்வார் இப்ராஹிம்: பக்கத்தான் ஹரப்பானே ஆட்சியமைக்கும்

2 mins read
50ee37fd-a4fb-4c66-9791-365b459ba028
மலேசியாவில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சியமைக்கப் போதுமான இடங்களை வெல்லும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். படம்: இணையம் -

கோலா­லம்­பூர்: 2022 பொதுத் தேர்­த­லில் பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­டணி பல­மு­னைப் போட்­டி­களை எதிர்­கொண்­டுள்­ளது. இருப்­பி­னும் இந்­தக் கூட்­ட­ணியே பெரும்­பான்மை பலத்­து­டன் வெற்­றி­பெ­றும் என்று மலே­சிய எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹிம் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

சாபா மாநி­லத்­தில் நேற்று முன்­தி­னம் இரவு நடந்த பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­டத்­திற்­குப் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னார் அன்­வார் இப்­ரா­ஹிம். அப்­போது அவர், அண்­மை­யில் அங்கு வெளி­யி­டப்­பட்ட கருத்­துக்­க­ணிப்­பு­களை நம்­ப­வேண்­டாம் என்­றும் பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணியே ஆட்சியமைக்கப் போதுமான தொகுதிகளை வெல்­லும் என்­றும் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

தேர்­தல் கணிப்பு வெளி­யிட்ட ஆய்­வா­ளர்­கள் களத்­தில் இறங்கி ஆய்வு செய்­தி­ருந்­தால் அவர்­க­ளுக்கு உண்மை புலப்­பட்­டி­ருக்­கும். அவர்­கள் நிச்­ச­யம் களத்­திற்­குச் சென்று வாக்­கா­ளர்­க­ளைச் சந்­தித்­தி­ருக்க மாட்­டார்­கள்.

ஆனால், நான் இந்த நாடு முழு­தும் சென்று மக்­க­ளைச் சந்­தித்­துள்­ளேன். வாக்­கா­ளர்­கள் குறித்த உண்மை நில­வ­ரத்­தின்­படி நிச்­ச­யம் பக்­கத்­தான் ஹரப்­பான் பெரும்­பான்­மை­யு­டன் வெற்­றி­பெ­றும். அதற்­காக நாங்­கள் இன்­னும் சற்று கூடு­த­லா­கப் பாடு­ப­ட­வேண்­டும் என்று மலே மெயில் இணைய இத­ழுக்கு அளித்த பேட்­டி­யில் தெரி­வித்­தார்.

மலே­சி­யா­வின் மொத்த நாடா­ளு­மன்­றத் தொகு­தி­கள் 222. அதில் 112 தொகு­தி­களில் வெல்­லும் கட்­சி­கள் ஆட்­சி­ய­மைக்­கும் அதி­கா­ரத்­தைப் பெறும்.

பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யு­டன் மேலும் இரண்டு முக்­கிய கூட்­ட­ணி­கள் உள்­ளன அவை பாரி­சான் நேச­னல் (பிஎன்), பெரிக்­காட்­டான் நேச­னல் (பிஎன்).

கடை­சி­யாக மெர்­டெகா சென்­டர், நவம்­பர் 5 முதல் நவம்­பர் 8ஆம் தேதி வரை ஒரு ஆய்வை மேற்­கொண்­டது.

அதில் பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­டணி, மேற்கு மலே­சி­யா­வின் மாநி­லங்­களில் மூன்றில் ஒரு மாநி­லத்­தில் ஆட்­சி­ய­மைக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.