அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி

1 mins read
5ca157a3-a855-4c75-857e-cf133e8f4edd
வெர்ஜினியா பல்கலைக்கழக வளாகம்/ஃபேஸ்புக் -
Google News Preferred Icon

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்; இருவர் காயமடைந்தனர்.

தாக்குதலை நடத்தியவர் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர் தேடப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.

அமெரிக்கப் பள்ளிகளில் அண்மைய ஆண்டுகளில் தொடர்ச்சியாகத் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

சில வகை துப்பாக்கிகளுக்குத் தடை விதிப்பது, துப்பாக்கி வாங்குபவர்களைச் சோதனைக்கு உட்படுத்துவது, துப்பாக்கி வைத்திருப்பவர்களின் தகவல்களைச் சேகரிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும் என்று கோரி பலர் பேரணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.