வாக்காளரை ஈர்ப்பதில் தீவிரம்

வாக்காளரை ஈர்ப்பதில் தீவிரம்

2 mins read
ce71ea6f-0358-43f4-8822-7c246308b399
பாஹாங் மாநிலத்தில் உள்ள பெரா தொகுதியில் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் போட்டியிடுகிறார். பிரசாரக் கூட்டத்துக்குப் பிறகு, தொகுதி வாசிகளைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளை அவர் கேட்டு அறிந்தார்.படம்: புளூம்பர்க் -

கோலா­லம்­பூர்: மலே­சி­யப் பொதுத் தேர்­தல் நெருங்­கி­வ­ரும் நிலை­யில், வேட்­பா­ளர்­கள் கடை­சிக்­கட்ட பிர­சா­ரங்­க­ளைச் செய்து வரு­கின்­ற­னர்.

வாக்­கா­ளர்­களை ஈர்த்து, அவர்

­க­ளது ஆத­ர­வைப் பெற வேட்பாளர்கள் தீவி­ரம் காட்டி வரு­கின்­ற­னர். குறிப்­பாக, யாருக்கு வாக்­க­ளிப்­பது என்­பது குறித்து இன்­னும் ஒரு முடி­வுக்கு வரா­த­வர்­க­ளைத் தம் பக்­கம் இழுக்க வேட்­பா­ளர்­க­ளி­டையே கடு­மை­யான போட்டி நில­வு­கிறது. வாக்­கா­ளர்­களை நேரில் சந்­திப்­பது மட்­டு­மின்றி சமூக ஊட­கம் வழி­யா­க­வும் வாக்­கா­ளர்­க­ளு­டன் வேட்­பா­ளர்­கள் தொடர்­பு­கொள்­கின்­ற­னர்.

பொது விடு­முறை

இதற்­கி­டையே, தேர்­த­லுக்கு முதல் நாளான இம்­மா­தம் 18ஆம் தேதி, தேர்­தல் நாளான 19ஆம் தேதி ஆகிய இரு நாள்களிலும் பொது விடு­முறை என்று மலே­சி­யா­வின் இடைக்­கா­லப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் நேற்று அறி­வித்­தார். அது­மட்­டு­மின்றி, இந்த இரண்டு நாள்­களில் தனி­யார் வாக­னங்­க­ளுக்­கான சாலைக் கட்­ட­ணங்­கள் வசூ­லிக்­கப்­ப­டாது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

வாக்­க­ளிப்பு மையங்­க­ளுக்­குச் சென்று வாக்­க­ளிக்க மேலும் பல மலே­சி­யர்­களை ஊக்­கு­விக்­கும் நோக்­கு­டன் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

வாக்­களிக்க எதிர்க்­கட்­சி­கள் அழைப்பு

இந்­நி­லை­யில், வாக்­கா­ளர் விகி­தம் அதி­க­மாக இருந்­தால் எதிர்க்­கட்­சி­க­ளுக்கு அது சாத­க­மாக அமை­யும் என்று பர­வ­லா­கப் பேசப்

­ப­டு­கிறது. குறிப்­பாக, பக்­கத்­தான் ஹரப்­பான் ஆட்­சி­யைக் கைப்­பற்­றக்­கூ­டும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

இதனால், வாக்­க­ளிக்­கத் திரண்டு வரு­மாறு மலே­சி­யர்

­க­ளுக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்­துள்­ள­ன. மலே­சி­யா­வுக்கு வந்து வாக்­க­ளிக்­கும்­படி வெளி­நாடு­ களில் வசிக்­கும் அல்­லது பணி­பு­ரி­யும் மலே­சி­யர்­க­ளை­யும் எதிர்க்­கட்­சி­யி­னர் ஊக்­கு­விக்­கின்­ற­னர்.

முகக்­க­வச விதி­முறை

இது ஒரு­பு­றம் இருக்க, கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் வாக்­க­ளிப்பு மையங்­க­ளுக்­குச் சென்று வாக்­கு அளிக்­கும்­போது கட்­டா­ய­மாக முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும் என்று மலே­சிய சுகா­தா­ரத்­துறை தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா தெரி­வித்­துள்­ளார். கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் சமூக இடை­வெளி விதி­மு­றை­யைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்­றும் பொதுப் போக்­கு­வ­ரத்து பயன்­ப­டுத்த அவர்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் அவர் கூறி­னார்.

'தந்திரச் சொற்களில் மயங்காதீர்'

எதிர்க்­கட்­சி­க­ளின் அர­சி­யல் தந்­தி­ரங்­களை நம்பி ஏமாற வேண்­டாம் என்று மலே­சிய சீனர் சங்­கத்­தின் தலை­வ­ரு­மான டாக்­டர் வீ கா சியோங் வாக்­கா­ளர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

எதிர்க்கட்சிகள் இனப் பாகுபாட்டு உணர்வைத் தூண்டுவதாக அவர் குறைகூறினார். இது நாட்டு மக்களின் ஒற்றுமையைப் பாதிக்கும் என்றார் அவர்.