பி20 உச்சநிலை மாநாட்டில் உலக முன்னணி வர்த்தகத் தலைவர்கள்

பி20 உச்சநிலை மாநாட்டில் உலக முன்னணி வர்த்தகத் தலைவர்கள்

2 mins read
0269b80a-9ebc-4b90-8a83-9f8aff3dfbba
-

இந்தோ­னீ­சி­யா­வின் பாலித் தீவில் நடை­பெற்­று­வ­ரும் ஜி20

மாநா­ட்டின் அங்­க­மாக பி20 எனும் உலக வர்த்­த­கத் தலை­வர்­க­ளின் உச்­ச­நிலை மாநாடு நடை­பெற்­றது.

இரண்டு நாள்­கள் நடந்த பி20 உச்­ச­நிலை மாநாட்­டில் கனடா பிர­த­மர் ஜஸ்­டின் ட்ரூடோ, ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஆண்­டனி அல்­

ப­னிஸ் உள்­ளிட்ட பல உல­கத் தலை­வர்­களும் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னர்.

உல­க­ள­வில் வர்த்­த­கங்­கள் எதிர்­நோக்­கும் முக்­கிய சவால்­கள் குறித்து ஜி20 அமைப்­பி­டம் கொள்கை அள­வி­லான பரிந்­துரை ­களை முன்­வைக்க இந்த பி20 ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. ஜி20ன் வர்த்­த­கப் பிரி­வாக வர்­ணிக்­கப்­படும் இந்த அமைப்­பின் உச்­ச­நிலை மாநாட்­டில் 3,300 பேர் கலந்­து­கொண்­ட­னர். உல­கத் தலை­வர்­கள், தலைமை நிர்­வாக அதி­கா­ரி­கள், 40க்கும் மேற்­பட்ட நாடு­

க­ளைச் சேர்ந்த பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளின் தலை­வர்­கள் என பல­த­ரப்­பி­ன­ரும் கலந்­து­கொண்­ட­னர். டெஸ்லா, டுவிட்­ட­ரின் தலைமை நிர்­வாக அதி­காரி இலோன் மஸ்க் இணை­யம் வழி கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார்.

அண்­மை­யில் டுவிட்­டரை வாங்­கிய அவர், அந்­தத் தளத்­தில் இன்­னும் அதி­க­மான காணொ­ளி­ க­ளை­யும் நீள­மான காணொ­ளி­

க­ளை­யும் பதி­விட ஆத­ர­வ­ளிக்­கப்­போ­வ­தா­கத் தெரி­வித்­தார். அவ்­வாறு செய்­வ­தால் காணொளி தயா­ரித்து பணம் ஈட்­டும் சமூ­கத்­தி­னர் இந்­தத் தளம் மூல­மும் வாழ்­வா­தா­ரத்தை ஏற்­ப­டுத்த வகை­செய்­யும் என்று கூறி­னார்.

புத்­தாக்­கத்தை விரி­வு­ப­டுத்­து­வது, அனை­வ­ரையும் உள்­ள­டக்­கிய, ஒத்­து­ழைப்­பு­ட­னான வளர்ச்சி என்ற கருப்­பொ­ரு­ளில் உச்­ச­நிலை மாநாடு நடை­பெற்­றது.

வர்த்­த­க­மும் முத­லீ­டும், எரி­சக்தி, நீடித்த நிலைத்­தன்­மை­யும் பரு­வ­நி­லை­யும், நிதி­யும் உள்­கட்­ட­மைப்­பும், வேலை­யின் எதிர்­கா­ல­மும் கல்­வி­யும், நேர்­மை­யும் கட்­டுக்­கோப்­பும், வர்த்­த­கத்­தின் மக­ளிர் போன்ற முக்­கிய கொள்கை அம்­சங்­கள் விவா­திக்­கப்­பட்­டன.

உச்­ச­நிலை மாநாட்­டின் முடி­வில் பி20 தலை­மைத்­து­வத்தை அடுத்த ஜி20 தலை­மைத்­து­வத்தை ஏற்­கும் இந்­தி­யா­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ உச்­ச­நிலை மாநாட்­டின் முடி­வில் உரை­யாற்­றி­னார். பி20 உச்­ச­நிலை மாநாட்­டில் மூன்று அம்­சங்­களில் 25 பரிந்­து­ரை­கள் முன்­வைக்­கப்­பட்­டன. நோய்ப் பர­வ­லுக்­குப் பிந்­தைய காலத்­தில் புத்­தாக்­கத்­தைத் தழுவி வளர்ச்­சியை முடுக்­கி­வி­டு­வது, சிறிய, நடுத்­தர நிறு­

வ­னங்­க­ளை­யும் எளி­தில் ஆபத்­துக்­குள்­ளா­கக் கூடிய குழுக்­க­ளை­யும் மேம்­ப­டுத்­து­வது, வளர்ச்சி அடைந்த நாடு­க­ளுக்­கும் வளர்ச்சி அடைந்­து­வ­ரும் நாடு­க­ளுக்­கும் இடையே ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்த ஆத­ரிப்­பது போன்ற அம்­சங்­களில் கவ­னம் செலுத்­தப்­படும்.

செய்தி: இர்ஷாத் முஹம்மது