செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
ac448b66-2d9d-4a7a-917c-8a14165b8679
-

சொத்தைப் பறிமுதல் செய்ய விண்ணப்பம்; நீதிமன்றம் மறுப்பு

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு ஊழல் குற்றம் தொடர்பாக 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, 1எம்டிபி ஊழல் தொடர்பாக அவரது வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட விலை உயர்ந்த பொருள்களைப் பறிமுதல் செய்ய நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது. இந்த விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

நஜிப்பின் வீட்டிலிருந்து அதிகாரிகள் விலை உயர்ந்த கைப்பைகள், நகைகளைப் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 300 மில்லியன் அமெரிக்க டாலர்

(S$412 மில்லியன்).

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: மூன்று பேர் பலி

வெர்ஜினியா: அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்; இருவர் காயமடைந்தனர். தாக்குதலை நடத்தியவர் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். அவர் தேடப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. அமெரிக்கப் பள்ளிகளில் அண்மைய ஆண்டுகளில் தொடர்ச்சியாகத் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. சில வகை துப்பாக்கிகளுக்குத் தடை விதிப்பது, துப்பாக்கி வாங்குபவர்களைச் சோதனைக்கு உட்படுத்துவது, துப்பாக்கி வைத்திருப்பவர்களின் தகவல்களைச் சேகரிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும் என்று கோரி பலர் பேரணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.