கெர்சன்: உக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்கள் போர்க் குற்றங்கள் புரிந்ததாகவும், பொது மக்களைக் கொன்றதாகவும் உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலன்ஸ்கி
குற்றம் சாட்டியுள்ளாார்.
அந்நகரில் 400க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்கள் புரியப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக திரு ஸெலன்ஸ்கி தெரிவித்தார். பொதுமக்கள், ராணுவ வீரர்கள் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யப் படைகள் உக்ரேனின் மற்ற பகுதிகளில் புரிந்த வன்செயல்களை கெர்சன் மாநிலத்திலும் செய்திருப்பதாக திரு ஸெலன்ஸ்கி தனது அன்றாட காணொளி உரையில் கூறினார். திரு ஸெலன்ஸ்கி முன்வைத்த குற்றச்சாட்டுகளை ராய்ட்டர்ஸ் நிறுவனத்தால் உடனடியாக உறுதிப்படுத்த இயலவில்லை.
பொது மக்களைக் குறிவைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதை ரஷ்யா மறுத்துள்ளது.
கெர்சன் மாநிலத்திலிருந்து ரஷ்யப் படைகள் வெளியானதைத் தொடர்ந்து, மாநிலத்தின் சில பகுதி களை உக்ரேனிய ராணுவம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை அன்று கைப்பற்றியது. பாதிக்கப்பட்ட முக்கியக் கட்டமைப்புகள் பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன. பல வீடுகளில் மின்சாரம், குடிநீர் வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி கள் கூறினர். அங்கு மனிதாபிமான நிலைமை மிக மோசமாக இருப்பதாகக் கூறப்பட்டது. பொதுமக்கள் பலர் ரஷ்யப் படைகளால் துன்
புறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இருநாடுகளுக்கு இடையே போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யப் படைகள் கைப்பற்றிய ஒரே மாவட்ட தலைநகரம் கெர்சன். அந்நகரை ரஷ்யப் படைகள் கடந்த வெள்ளிக்கிழமை கைவிட்டதைத் தொடர்ந்து, அந்த நகரம் மீண்டும் உக்ரேன் வசமானது. அதைக் கொண்டாட அந்நகர மக்கள் உக்ரேனிய கொடிகளை அசைத்து உக்ரேனிய படைகளை நகருக்குள் வரவேற்றனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக கெர்சன் நகரில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

