10,000 பேரை வேலையிலிருந்து நீக்க அமேசான் நிறுவனம் திட்டம்

10,000 பேரை வேலையிலிருந்து நீக்க அமேசான் நிறுவனம் திட்டம்

1 mins read
b0f8b77a-1ff0-43ea-93e0-fac7bdbbfa38
-

நியூயார்க்: அமே­சான் நிறு­வ­னத்­தின் வர­லாற்­றி­லேயே மிகப் பெரிய ஆட்­கு­றைப்­புப் பணி இவ்­வா­ரம் முதல் தொடங்­க­வுள்­ள­தாக பெயர் குறிப்­பிட விரும்­பாத நம்­ப­க­மான தரப்­பு­கள் கூறு­கின்­றன. கிட்­டத்­தட்ட 10,000 பேரை நிறு­வன, தொழில்­நுட்­பப் பணி­க­ளி­லி­ருந்து நீக்­க நிறு­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

வாடிக்­கை­யா­ளர்­கள் பொருள் அதி­கம் வாங்­கக்­கூ­டிய இந்த விடு­மு­றைக் காலத்­தில் இத்­தகைய ஆட்­கு­றைப்­புக்கு அமே­சான் திட்­ட­மிட்­டி­ருப்­ப­தன்­வழி, அனைத்­து­ல­கப் பொரு­ளி­யல் நெருக்­கடி நிறு­வ­னத்­தின்­மீது கொண்­டுள்ள தாக்­கத்தை உணர முடி­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அதிக எண்­ணிக்­கை­யில் ஊழி­யர்­கள், குறைந்த அள­வில் பொருள் விநி­யோ­கம் என இயங்கி­வ­ரும் அதன் உட்­பி­ரி­வு­களை அமே­சான் ஆராய்ந்து ஆட்­கு­றைப்பு நடத்த வேண்­டிய கட்­டா­யம் எழுந்­துள்­ள­தாக நம்­பப்­படு­கிறது.

கொள்­ளை­நோய் சூழ­லில் அமே­சான் என்­றும் இல்­லாத லாபத்தை ஈட்­டி­யது. அத­னால் ஈராண்­டு­களில் அதன் ஊழி­யர் அணி­யை­யும் நிறு­வனம் இரு­மடங்­காக்­கி­யது. இருப்­பி­னும், இவ்­வாண்டு முற்­பா­தி­யில் 20 ஆண்­டு­களில் காணாத வளர்ச்சி சரி­வை­யும் நிறு­வ­னம் சந்­தித்­தது.