சீனாவில் தலைதூக்கும் கொவிட்-19; மக்கள் எரிச்சல்

சீனாவில் தலைதூக்கும் கொவிட்-19; மக்கள் எரிச்சல்

1 mins read
2f55b0d5-bbdd-43c2-9b22-9a0e24c86bc9
சாலைத் தடுப்புகளை மக்கள் உடைத்தெறிந்து நடமாடும் காணொளிகள் டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. படம்: டுவிட்டர் -

பெய்­ஜிங்: கொரோனா கிருமி தொடர்­பில் சீனா விதித்­துள்ள கட்­டுப்­பா­டு­க­ளுக்கு அந்­நாட்டு மக்­கள் எதிர்ப்பு தெரி­விக்­கும் வகை­யில் நேற்று முன்­தி­னம் கொவிட்-19 தடுப்­பு­களை உடைத்­தெ­றிந்­து­விட்டு வீதி­களில் நட­மா­டி­னர். இதைக் காட்­டும் காணொ­ளிக் காட்­சி­கள் சமூக ஊட­கங்­களில் வலம்­வ­ரு­கின்­றன.

சீன நக­ரான குவாங்­சோ­வில் தின­மும் அதிக எண்­ணிக்­கை­யில் கொவிட்-19 சம்­ப­வங்­கள் பதி­வாகி வரும் நிலை­யில், எண்­ணிக்கை முதன்­மு­றை­யாக 5,000ஐத் தொட்­ட­போது, முடக்­க­நிலை மேலும் கடு­மை­யா­க­லாம் என்ற யூகம் மக்­களி­டையே எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யது.

அதை­ய­டுத்து குவாங்­சோ­வின் ஹைசு பகு­தி­யில் மக்­கள் தடுப்­பு­களைத் தூக்­கி­யெ­றிந்­து­விட்டு இங்கு­மங்­கு­மாக நடப்­ப­தைக் காட்­டும் காணொ­ளி­கள் டுவிட்­டர் தளத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டன.

சீனா­வில் திங்­கட்­கி­ழ­மை­யன்று புதி­தாக 17,772 உள்­ளூர் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின. ஏப்­ரல் மாதத்­துக்­குப் பிறகு பதி­வான ஆக அதிக எண்­ணிக்கை இது­வா­கும்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும் என்று கடந்த வாரம் அறி­விக்­கப்­பட்­டும் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரிப்­ப­தால் மக்­களும் பதற்­ற­நி­லைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.