மலேசியப் பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாள்கள் இருக்கும் நிலையில், எதிர்த்தரப்பு பக்காட்டான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த எம். கருப்பையா காலமாகி விட்டார்.
கெடாவில் உள்ள பாடாங் சிராய் தொகுதியில் போட்டியிட்ட திரு கருப்பையா, இன்று மரணமடைந்தார்.
கெஅடிலான் (பிகேஆர்) கட்சியைச் சேர்ந்த அவர், பாடாங் சிராய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
பிகேஆர் கட்சியின் தலைவர் டாக்டர் அன்வார் இப்ராஹிம் பாடாங் சிராய், குலிம் ஆகிய தொகுதிகளுக்குப் பயணம் சென்றபோது திரு கருப்பையா உடன் இருந்தார் என்று கூறப்பட்டது.
அந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் விழுந்ததாகவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவரும் கங்கார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான நூர் அமின் அகமது கூறினார்.
பின்னர் திரு கருப்பையா மாண்டுவிட்டதாக அவர் குடும்பத்தார் தகவல் தெரிவித்ததாக திரு நூர் அமின் தி மலேய் மெயிலிடம் கூறினார்.
பாடாங் சிராய் தொகுதியில் கடும் ஆறு முனைப் போட்டி நிலவியது.
திரு கருப்பையா இறந்ததை அடுத்து, அத்தொகுதி பற்றி மலேசியப் பொதுத் தேர்தல் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
திரு எம் கருப்பையா முன்னாள் ராணுவ அதிகாரி என்று கூறப்பட்டது.


