மீண்டும் களத்தில் இறங்குகிறார் டோனல்ட் டிரம்ப்

மீண்டும் களத்தில் இறங்குகிறார் டோனல்ட் டிரம்ப்

1 mins read
a94a3443-41d1-4dda-b56b-8c38e6285cd1
டோனல்ட் டிரம்ப். படம்: ஏஎஃப்பி -

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்த குடியரசு, ஜனநாயகக் கட்சிகளைச் சேர்ந்த முதல் வேட்பாளர் அவர்.

ஃபுளோரிடாவில் உள்ள தமது மார்-அ-லாகோ இல்லத்திலிருந்து அவர் தமது ஆதரவாளர்களிடம் பேசினார்.

அமெரிக்காவின் மீட்சி இப்போதே தொடங்குகிறது என்றார் அவர்.

இந்நிலையில் திரு டிரம்பின் வேட்புமனுக்கான விண்ணப்பத்தை அவரது உதவியாளர்கள் அமெரிக்கத் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தனர்.

அவரது மகள் இவாங்கா டிரம்ப், தமது தந்தையின் தேர்தல் பிரசாரத்தில் பங்குபெறப் போவதில்லை என்று கூறிவிட்டார்.

பதவியில் இருக்கும்போது இருமுறை குற்றஞ்சாட்டப்பட்ட அவர், பல சட்ட வழக்குகளை எதிர்நோக்குகிறார்.

ஆனால் குடியரசுக் கட்சியில் அவருக்கான ஆதரவும் , பணபலம், செல்வாக்கு ஆகியவையும் அதிகம். இருப்பினும், அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நடந்து முடிந்த இடைக்காலத்

தேர்தலில் குடியரசு கட்சி சிறப்பாகச் செய்யாததற்கு அவர் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. அவருக்கு ஆதரவான பல வேட்பாளர்கள் தேர்தலில் மண்ணைக் கவ்வினர்.

திரு டிரம்புக்கு எதிராக குடியரசு கட்சியில் பல புதியவர்கள் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் களம் இறங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.