ஆய்வு: உரத்த இசையால் ஒரு பில்லியன் இளையர்களுக்குக் காது கேளாமல் போகலாம்

ஆய்வு: உரத்த இசையால் ஒரு பில்லியன் இளையர்களுக்குக் காது கேளாமல் போகலாம்

1 mins read
7f7c63e9-7d42-4212-9e71-8e4cbbce7c57
-

பாரிஸ்: உரத்த இசை ஒலிக்­கும் இடங்­க­ளுக்­குச் செல்­வ­தா­லும் காதொ­லிப்­பா­னில் பாடல் கேட்­ப­தா­லும் உல­கின் சுமார் ஒரு பில்­லி­யன் இளை­யர்­க­ளுக்­குக் காது கேளா­மல் போகும் அபா­யம் இருப்பதாக உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இளை­யர்­கள் தங்­க­ளின் செவித்­தி­றன் பழக்­கங்­களில் கூடு­தல் கவ­னம் செலுத்த வேண்­டும் என ஆய்வு மேற்­கொண்ட நிறு­வ­னம் கோரி­யது. எதிர்­கா­லத்­தில் இந்த அபா­யத்­தைக் குறைக்க நாடு­களும் உற்­பத்தி நிறு­வ­னங்­களும் கூடு­தல் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­றது நிறு­வ­னம்.

ஆங்­கில, ஸ்பா­னிய, பிரஞ்சு, ரஷ்ய மொழி­களில் கடந்த இரு­பது ஆண்­டு­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்ட 33 ஆய்­வு­க­ளின் தர­வு­களை ஆராய்ந்து தொகுக்கப்பட்ட பகுப்­பாய்வு அறிக்கை, 'பிஎம்ஜே குளோ­பல் ஹெல்த்' இத­ழில் வெளி­யி­டப்­பட்­டுள்ளது. ஆய்­வில் 12 முதல் 34 வயது வரை­யி­லான 19,000க்கும் அதி­க­மா­னோர் பங்­கேற்­ற­னர். இசை நிகழ்ச்­சி­களிலும் இரவு உல்­லாச விடு­தி­களிலும் ஏறத்­தாழ 48% இளை­யர்­கள் அதிக இரைச்­ச­லுக்கு ஆளா­கின்­ற­னர் என்­றும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.