செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
f8673414-e9de-4e31-8bfa-2ab479ea5fb7
-

மலேசியப் பொதுத் தேர்தல்:

வேட்பாளர் எம்.கருப்பையா மரணம்

அலோர் ஸ்டார்: மலேசியத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானின் வேட்பாளர் திரு எம்.கருப்பையா நேற்று காலமாகி விட்டார். அவரின் மரணத்திற்கான காரணம் அறியப்படவில்லை. பிகேஆர் எனப்படும் 'பார்ட்டி கெஅடிலான் ராக்யாட்'டைச் சேர்ந்த திரு கருப்பையா, முன்னைய தேர்தலில் 8,813 பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் கெடாவின் பாடாங் சிராய் தொகுதியில் வெற்றிபெற்றார். இந்நிலையில், பாடாங் சிராய் தேர்தலுக்கான முக்கியத் தேதிகளை உறுதிசெய்வது குறித்துப் பேச நாளை சிறப்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்தது. (படம்: இன்ஸ்டகிராம்)

பாகிஸ்தான் படத்திற்கு வெளிநாட்டில் புகழ்மாலை, உள்நாட்டில் தடை

லாகூர்: ஒரு திருநங்கைக்கும் திருமணமான ஓர் ஆணுக்கும் இடையே மலரும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பாகிஸ்தான் திரைப்படமான 'ஜாய்லேன்ட்', அனைத்துலக மேடையில் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சொந்த மண்ணில் தடை செய்யப்பட்டு உள்ளது. முதலில் தணிக்கைக் குழு இப்படத்திற்கு அனுமதி வழங்கியபோதும் இஸ்லாமியர்கள் தந்த அழுத்தத்தால் அரசாங்கம் படத்தைத் தடைசெய்துள்ளது. 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் விருதுபெற்ற இப்படத்தை, பாகிஸ்தான் அடுத்த ஆஸ்காருக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.